ஏன் தாத்தா எப்படி ஒரு அறிவியல் வளர்ச்சி இல்லாத நாட்களில் நீங்கள் வாழ்ந்தீர்கள், ட்ரோன் இல்லாமல், பிட் காயின் இல்லாமல், இன்டர்நெட் கனெக்சன் இல்லாமல், தொலைக்காட்சி இல்லாமல், குளிர் சாதன வசதி இல்லாமல், கார் இல்லாமல், மொபைல் போன் இல்லாமல் எப்படி வாழ முடிந்தது.
அதற்கு தாத்தா பேரனிடம்
” எப்படி நீங்கள் பிராத்தனை இல்லாமல், இரக்கம் இல்லாமல், மரியாதை இல்லாமல், உண்மையான கல்வி இல்லாமல், மோசமான ஆளுமை, மனிதாபிமானம் இல்லாமல், அவமானம் இல்லாமல், தன்னடக்கம் இல்லாமல், நேர்மை இல்லாமல் எப்படி நீங்கள் வாழ்கிறீர்களோ அப்படித்தான் நாங்கள் வாழ்ந்தோம்.
நாங்கள் 1930 – 1980 கால கட்டத்தில் பிறந்த நாங்கள் புண்ணியம் செய்தவர்கள். நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை தான் நாங்க வாழ்ந்த வாழ்வின் அத்தாட்சி!
* நாங்கள் விளையாடும்போதோ அல்லது வண்டி ஓட்டும்போதோ தலைக்கவசம் அணிந்து இருக்க வில்லை.
* பள்ளி முடிந்து வீடு வந்து வீட்டு பாடங்கள் செய்தோம்.
* மாலை சூரியன் மறையும் வரை திறந்த வெளியில் நண்பர்களுடன் விளையாடினோம்.
* நாங்கள் எப்பொழுதும் நிஜ நண்பர்களுடன் விளையாடினோம் எங்களுக்கு இந்த மெய் நிகர் நண்பர்கள் தெரியாது.
* தாகம் எடுத்தால் நீர் ஊற்று, ஓடை, ஆறு, அருவிகளில் நீர் அருந்தினோம் மினரல் வாட்டர் அல்ல.
* உடம்பு சரியில்லாமல் போகும் என்று நாங்கள் கவலை பட்டதே இல்லை நண்பர்களுடன் ஒரே கோப்பை ஒரே தட்டில் சாப்பிட்டு இருந்தோம்.
* தினமும் பிரட் பாஸ்தா போன்ற துரித உணவுகளை சாப்பிட்டு உடல் பருமன் ஆகி விட்டது என்று வருத்தப்படவில்லை.
* வெருங்காலுடன் நடந்தாலும் விளையாடினாலும் எங்கள் காலுக்கு எதுவும் ஆக வில்லை.
* தனியாக சத்துக்கள் எதையும் சேர்த்து கொள்ளவில்லை!
* எங்களுடைய பொம்மைகளை நாங்களே தயாரித்து விளையாடினோம்.
* எங்கள் பெற்றோர்கள் செல்வந்தர்கள் இல்லை அவர்கள் நிறைய அன்பை கொடுத்தார்கள் பொருட்களையோ அல்லது பரிசோ அல்ல.
* எங்கள் காலத்தில் செல் ஃபோன், டி வி டி, வீடியோ கேம்ஸ், லேப் டாப், இன்டர்நெட் அரட்டை இல்லை.
* ஆனால் உண்மையான நண்பர்கள் எங்களுடன் இருந்தனர்.
* நாங்கள் அழைக்கபடாமலே எங்கள் நண்பர்கள் வீட்டுக்கு செல்வோம் அவர்களுடன் சேர்ந்து உணவு உண்டு மகிழ்வோம்.
* பெற்றோர்கள் அருகருகே வாழ்ந்து குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார்காள்.
* எங்கள் காலத்தில் கருப்பு வெள்ளை புகைப்படம் தான் இருந்தது ஆனால் இனிய வண்ண நினைவுகளை அது சுமந்து கொண்டு இருந்தது.
* நாங்கள் தனித்துவம் நிறைந்தவர்கள் ஏனென்றால் எங்கள் தலைமுறை தான் கடைசியாக பெற்றோர்கள் சொல் மதித்து வளர்ந்தவர்கள்.
* அது போல் நாங்கள் தான் எங்கள் குழந்தைகள் சொல் பேச்சு கேட்டு நடக்கும் முதல் தலைமுறை மக்களும் நாங்கள் தான்.




