ஒரு டம்பளர் இருந்தால் போதும் சர்க்கரைவள்ளி கிழங்கு🍠🍠🍠ஈசியாக வீட்டிலேயே வளர்க்கலாம்….
கடையில் வாங்கிய சக்கரைவள்ளி கிழங்கினை ஒரு சிறிய டம்ளரில் பாதி அளவு தண்ணீரை ஊற்றி டம்ளரில் கிழங்கினை போட்டு வைத்தால் சிறிது நாட்களில் கிழங்கில் இருந்து பரு முளைக்க தொடங்க ஆரம்பிக்கும். முளைக்க தொடங்கிய சிறிது நாட்களில் கிழங்கில் இருந்து கொடிகள் நன்கு வளர்ந்து கொடி ஓட ஆரம்பிக்கும்.
1 அடி வரை நன்கு வளர்ந்த கொடியினை நாம் உடைத்து மண்ணில் ஊன்றி வைத்தால் அடுத்த 5 மாதங்களில் நமக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு தயாராகிவிடும்🍠
குறிப்பு: இதற்கிடையில் நாம் தண்ணீரை 5 நாட்களுக்கு ஒரு முறை நாம் மாற்றி வைக்க வேண்டும்




