Oplus_131072
ஒரு நல்ல குடும்பம் என்பது எப்படி இருக்க வேண்டும்?
1.உண்மையான அன்பு காட்ட வேண்டும். நேர்மையான வாழ்க்கையின் மேன்மையைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2.உறவுகளை எல்லா வகையிலும் பேண வேண்டும்.
3.பெரியவர்களுக்கு உரிய மரியாதை மற்றும் அன்பைக் குறைவில்லாமல் காட்ட வேண்டும்.
4.முதல் வட்ட மற்றும் அடுத்தடுத்து உள்ளவர்களையும் அன்பு காட்டி அனுசரிக்க வேண்டும்.
5. தங்கள் குடும்பப் பிள்ளைகளுக்கு நமது பாரத நாட்டின் மதிப்பு மிக்கப் பாரம்பரியம்.. கலாச்சாரம்.. நாட்டுப்பற்று — இவைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.
நமது பண்டிகைகளின் பின்னால் உள்ள அறிவியல் மற்றும் சமூகக் கருத்துக்களைப் பிள்ளைகள் புரிந்து கொள்ள நமது பாரம்பரிய முறையில் அவற்றைக் கொண்டாட வேண்டும்.
நமது பாரம்பரிய உணவு முறைகளைப் பழக்கப் படுத்த வேண்டும். இவற்றை எல்லாம் இளம் வயதிலேயே அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
6.வீட்டில் உள்ளோர் அனைவரும் ஏதாவது ஒரு நேரமாவது ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும்.
7.வீட்டை எப்போதும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். அதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
8.வரவுக்குள் செலவைக் கட்டாயம் அடக்க வேண்டும்.
9.கட்டாயம் ஒரு சிறிய தொகையாவது சேமிக்க வேண்டும்.
10.நல்ல நட்பு வட்டம் வேண்டும்.
11.அக்கம் பக்கம் இருப்போருடன் நல்ல உறவைப் பேண வேண்டும் : நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.
12.குடும்பம் சமுதாயத்தின் மிக அடிப்படையான அங்கம் என்பதை மனதில் கொண்டு (Family is the basic unit of the Society) நம்மால் முடிந்த சமுதாயக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
13. ஆணோ பெண்ணோ எதிர் பாலாரை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக ” இது நமது குடும்பம் ” என்ற எண்ணம் எப்போதும் வேண்டும்…குறிப்பாக இந்தக் கால இளம் பெண்களுக்கு !
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். பல்கலைக்கழகமாகக் கூட வேண்டாம்…ஒரு நல்ல திண்ணைப் பள்ளிக்கூடமாகவாவது நமது குடும்பம் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நினைக்க வேண்டும்…அப்படி வாழப் பழக வேண்டும்.




