Oplus_131072
ஒரேமாறி இல்லாமல் வித்யாசமான காலை உணவு – இப்படி மாக்ரோனி செய்து பாருங்க.
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி ஒரு சின்ன துண்டு பட்டை, ஒரு வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, அரை ஸ்பூன் மிளகாய் தூள், கால் ஸ்பூன் மல்லித்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு டம்ளர் மாக்ரோனிக்கு ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
கடைசியில் மாக்ரோனியில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து மூடி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.




