Oplus_131072
பூமியின் எடை தினமும் அதிகரித்து வரும் நிலையில் அது எப்போது மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ளும்…?
சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆதிவாசிகள் இப்பூமியில் சுற்றி திரிந்தபோது அவர்களுடன் பிற உயிரினங்கள், காடுகள், மலைகள் மற்றும் கடல்கள் மட்டுமே இருந்தன.
அப்போது பூமியின் எடை 6,000,000,000,000,000,000 மில்லியன் கிலோ.
இப்போது 2025-ம் ஆண்டில் காடுகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் மனிதர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இது தவிர, புதிதாக வீடுகள், மாபெரும் கட்டடங்கள், கோபுரங்கள், பாலங்கள், கார்கள், ரயில்கள், இயந்திரங்கள்
என பல விஷயங்கள் புதிதாக முளைத்துள்ளன.
ஆனாலும், இப்போது பூமியின் எடை அதே 6,000,000,000,000,000,000 மில்லியன் கிலோ தான்.
எப்படி….?
ஏனெனில், பூமியில் எந்த ஒரு கட்டடம், வாகனம், இயந்திரம் உள்ளிட்ட எந்தவொரு புதிய பொருள் உருவானாலும், அதை உருவாக்க தேவையான அனைத்து பொருட்களும் பூமியில் இருந்து தான் பெறப்பட்டன.
உதாரணமாக….
ஒரு பயணிகள் இரயிலின் எடை 5 லட்சம் கிலோ இருக்கும். இதனை உருவாக்க தேவையான இரும்புகளை நாம் நிலாவில் இருந்தோ அல்லது வேறு கிரகத்தில் இருந்தோ கொண்டு வரவில்லை. எல்லாமே நம் பூமியில் இருந்து தான் எடுக்கப்பட்டது.
ஆக, பல்வேறு இடங்களில் இரும்பாக சேகரித்த ஒரு பொருள் இன்னொரு இடத்தில் இரயிலாக உள்ளது. எனவே, புதிதாக இரயிலை உருவாக்கியதால் பூமிக்கு எடை கூடவில்லை.
இதேபோல் தான் வீடுகள், கட்டடங்கள், பாலங்கள், இயந்திரங்கள் மற்றும் எல்லா வாகனங்களும் உருவாக்கப்படுகின்றன.
இவைகள் எப்போதும் பூமியின் எடையை கூட்டாது.
ஆனால், மரங்கள் மற்றும் உயிரினங்கள்…?
மரங்கள்:
ஒரு ஆலமர விதையின் எடை 0.2 மி.கி தான். ஆனால், இதே விதை பல ஆண்டுகளுக்கு பின்னர் முழு வளர்ச்சி அடைந்த பின்னர் அதன் எடை 2 லட்சம் கிலோ வரை இருக்கும்.
அப்போ, இந்த 2 லட்சம் எடையும் பூமியில் கூடுதலாக உருவானது தானே…? உலகிலுள்ள அனைத்து மரங்களும் பூமியின் எடையை கூட்டியிருக்கும் தானே…?
இப்படி நீங்கள் நினைத்தால் அது தவறு.
(இப்போது நீங்கள் ஒரு விஷயத்தை மனதில் பதிய வைக்க வேண்டும்.
அது…
“உலகில் உள்ள உயிருள்ள/உயிரற்ற என அனைத்து பொருட்களும் அணுக்களால்(Atoms) ஆனது”)
மரங்கள் எப்படி எடையை கூட்டவில்லை….?
விதையில் இருந்து மரம் வளர அதற்கு சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு வேண்டும்.
இவை மூன்றும் ஏற்கனவே பூமியில் தான் உள்ளன. (சூரிய ஒளி மேலிருந்து வந்தாலும், அதற்கு எடை கிடையாது)
இந்த மூன்றையும் செடி குளுக்கோஸாக மாற்றும். பின்னர் இந்த குளுக்கோஸை செல்லுலோஸ், ஸ்டார்ச், புரோட்டீன் மற்றும் லிப்பிட்களாக மாற்றும்.
இந்த நான்கும் தான் ஒரு மரத்திற்கு தடினமான உருவத்தையும், இலைகளையும் தருகின்றன.
அதாவது…
(சூரிய ஒளியில் அணுக்கள் இல்லை)
தண்ணீரில் உள்ள கண்ணுக்கு தெரியாத அணுக்கள்…
கார்பன்-டை-ஆக்ஸைடில் உள்ள கண்ணுக்கு தெரியாத அணுக்கள்…
இந்த அனைத்து அணுக்களும் ஒன்றாக சேர்ந்து தான் கண்ணுக்கு தெரிகின்ற ஒரு பெரிய மரமாக நம் முன்னே உள்ளது.
ஆக, இந்த அணுக்கள் ஏற்கனவே பூமியிலேயே இருந்தவை தானே…?
இப்படி இருக்கும்போது பெரிதாக வளர்ந்த மரங்கள் எப்படி பூமியின் எடையை கூட்டும்…?
இங்கே இன்னொரு விஷயத்தையும் தெளிவுப்படுத்துகிறேன்.
‘Bing Bang நிகழ்ந்தபோது ஒன்றுமே இல்லாத இடத்திலிருந்து வெடித்தபோது எப்படி இவ்வளவு பிரமாண்டமான கிரகங்கள், நட்சத்திரங்கள், கேலக்ஸிகள் உருவாகின..’ என பலர் கேட்டார்கள்.
இதற்கு பதில் உங்கள் முன்னால் இருக்கின்ற மரங்களே பதில் சொல்லும்…
கண்ணால் பார்க்க முடியாத கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவில் உள்ள அணுக்களை எடுத்துக்கொண்டு இப்போது கண்ணுக்கு தெரிகின்ற பெரிய மரமாக வளர்ந்து நிற்பது உண்மை தானே..?
இதே போல் தான் பிங் பேங் நிகழ்ந்தபோது கண்ணுக்கு தெரியாத அணுக்கள் எல்லாம் ஒன்றுக் கூடி கிரகங்கள் உள்ளிட்ட எல்லாமே உருவானது.
சரி, மனிதர்களாகிய நாம் ஒரு விந்தணுவில் இருந்து தானே வளர்ந்து வந்தோம்…? நாம் பூமியின் எடையை கூட்டவில்லையா…?
இல்லை.
காரணம், மரங்கள் போல் தான் நாமும் வளர்கிறோம்.
உதாரணமாக,
நம் தசைகள், எழும்புகள் உள்ளுறுப்புகள் பெரிதாக ஆவதை தான் நாம் வளர்ச்சி என்கிறோம்.
இந்த வளர்ச்சி எப்படி நிகழ்கிறது…?
புரோட்டீன் உள்ள உணவு பொருட்களை நாம் சாப்பிடும்போது, அவற்றில் உள்ள அணுக்கள் அனைத்தும் ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து சேர்ந்து தசைகளாக விரிவடைகிறது.
அதாவது, ஒரு மணல் துகள் தான் ஒரு அணு என்றால், ஒரு பை நிறைய மணல்களை போட்டு நிறப்பினால் அது பெரிதாகும். அது தான் தசை.
இன்ஃபேக்ட், சிக்கன், மட்டன் சாப்பிடும்போது நீங்கள் ஆக்சுவலி அந்த விலங்குகளின் அணுக்களை தான் சாப்பிடுகிறீர்கள்.
இதுபோல் கால்சியம் அடங்கிய உணவுகளை சாப்பிடும்போது அதில் உள்ள அணுக்கள் ஒன்று சேர்ந்து சேர்ந்து எலும்புகளாக வளர்கின்றன.
இதே போல் தான் ஒவ்வொரு உறுப்பும் நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவில் உள்ள அணுக்களால் ஒன்றாக சேர்ந்து உருவானவை.
இந்த அணுக்கள் எல்லாம்……ஏற்கனவே பூமியில் இருக்கின்றன. அதாவது, எங்கோ ஒரு இடத்தில் கத்திரிக்காயில் இருந்த அணுக்கள் நம்மிடம் வந்து சேர்ந்து ஏதாவது ஒரு உறுப்பில் சேர்ந்துள்ளது.
ஆக, மரங்களும், நாமும், பிற உயிரினங்களும் பூமியின் எடையை அதிகரிக்கவில்லை.
அப்போ எது தான் பூமியின் எடையை கூட்டுகிறது…?
பூமியின் எடையை உண்மையாக கூட்டுவது எரிகற்கள் மட்டுமே.
எரிகற்கள் மட்டுமே பூமிக்கு வெளியே இருந்து வந்து பூமியில் தினமும் கண்ணுக்கு தெரியாமல் சிறிய அளவில் விழுகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் கிலோ எடை கொண்ட எரிகற்கள் விழுகின்றன.
பூமியின் எடையுடன் ஒப்பிடுபோது இந்த ஒரு லட்சம் கிலோ எடை என்பது பசுபிக் பெருங்கடலில் ஒரு துளி விழுவது போல் ஆகும். எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
ஒரு கோடி ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கிலோ கூடினால் மாற்றம் வருமா…?
நிச்சயமாக வராது.
அப்போ, பூமியின் சுற்றுப்பாதையை மாற்ற அல்லது பூமிக்கு ஆபத்து ஏற்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் இதே 1 லட்சம் கிலோ எடையுடன் தேவைப்படும்….?
சுமார் ‘1.2 பில்லியன் டிரில்லியன்’ ஆண்டுகள் ஆகும்…ஆனால், இந்த பிரபஞ்சம் உருவாகியே 13.8 பில்லியன் ஆண்டுகள் தான் ஆகிறது.
ஆக, பூமியின் எடை எப்போதும் அதிகரிக்க போவதில்லை (எரிகற்களின் எடை தவிர்த்து) பூமிக்கு ஆபத்து ஏற்படப்போவதும் இல்லை 🙏🙏🙏
படித்ததில் பிடித்தது….




