ஓம பொடி சிறிது உப்பு சேர்த்து மோரில் குடித்து வந்தால் எந்த நோய் ஓடிப்போகும் தெரியுமா..??

Oplus_131072

 

பொதுவாக சித்த மருத்துவத்தில் ஓமத்துக்கு தனியிடம் உண்டு .இந்த ஓமம் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்தலாம் .இந்த ஓமத்துடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் எந்த நோய்களை விரட்டலாம் என்று இந்த பதிவில் அறியலாம்

1. ஓம எண்ணெய் வாங்கி வந்து மூட்டு வலி இருந்தால் தடவி வர , மூட்டு வலி விரைவில் குணமாகும்.

2. ஓமத்துடன், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்து பொடி செய்து அதனை தேனில் கலந்து சாப்பிட, வயிற்று வலி குணமாகும்.

3. ஒரு லிட்டர் தண்ணீரில் ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க ,செரிமான பிரச்சனை மற்றும் ஆஸ்துமா குணமாகும்.

4.அடுத்து வயிறு மந்தமாக இருந்தால் ஓமம், சீரகம் சமஅளவு எடுத்து அதனை ஒரு கடாயில் பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும்.

5.பின் அதை இறக்கி ஆறவைத்து உப்பு சேர்த்து மிக்சியில் பொடியாக அரைத்து சாப்பிட வயிறு மந்தம் குணமாகும்

6.அடுத்து ஓம பொடி சிறிது உப்பு சேர்த்து மோரில் குடித்து வந்தால் நெஞ்சு சளி வெளியேறும்.

7. அடுத்து சோர்வாக இருப்பவர்கள் மற்றும் சோம்பல் இருப்பவர்கள் ஓமம் தண்ணீர் குடித்து வந்தால் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

8.அடுத்து பல்வலியால் அவதி படுபவர்கள் ஓமம் எண்ணெய் எடுத்து பஞ்சில் நனைத்து வலி உள்ள இடத்தில் வைத்தால் பல்வலி காணாமல் போகும் .

 

Read Previous

தொழில்நுட்ப கோளாறால் PSLV-C 62 ராக்கெட் தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு..!!

Read Next

பாத்திரம் தேய்க்க உதவும்  Steel Scrubber பாதுகாப்பானதா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular