கடவுளுக்கு பயப்பட தேவையில்லை..!! கர்ம வினைகளுக்கு பயப்படுங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

கடவுளுக்கு பயப்பட தேவையில்லை. கர்ம வினைகளுக்கு பயப்படுங்கள். ஏனெனில், கடவுள் மன்னிப்பார் கர்மவினைகள் திரும்பி வந்தே தீரும். சக மனிதனுக்கு தொண்டு செய்பவன், கடவுளுக்கு தொண்டு செய்தவன் ஆகிறான். தனக்குள் இருக்கும் கடவுளை தரிசிக்கும் பேறும் பெறுகிறான்.

இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுமே இறைவனால் அன்பு செய்யப்படுகின்றன. அனைத்துமே தனித்துவமானவை. அதிலும் மனித பிறப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மனிதராகப் பிறந்த நாம் அனைவருமே. மகிழ்ச்சியாக வாழ தகுதியானவர்கள்.

வெற்றி பெற தகுதியானவர்கள் கனவு காணத் தகுதியானவர்கள்.
நம் தகுதியை நிர்ணயிப்பதற்கு நமக்கு மட்டுமே உரிமை இருக்கிறது. உங்கள் தகுதியை மற்றவர்கள் நிர்ணயம் செய்ய அனுமதிக்காதீர்கள்.

உங்களது மதிப்பை நீங்கள் உணர்ந்தால் நிச்சயம் ஒருநாள் வென்று காட்டுவீர்கள். உள்ளது எதுவோ, அதை இறைவன் கொடுத்ததாக எண்ணி மகிழ்ச்சியாக இருங்கள். இல்லாதது எதுவோ அது இனிமேல் இறைவன் கொடுப்பான் என்று நம்பிக்கையோடு இருங்கள்.

 

Read Previous

எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் முருங்கை..!!

Read Next

வாழைப்பழத்தின் வகைகள் மற்றும் அதன் மகத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular