நாம் அனைவரும் பணம் ஏதேனும் வேண்டுமென்றால் செல்வது ஏடிஎம்க்கு தான். அப்படி பணம் எடுப்பதில் பல நிபந்தனைகளும் கட்டணங்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒருவர் ஏடிஎம் சென்று ஐந்து முறைக்குமேல் பயன்படுத்தினால் ரூ.21/- கட்டணமாக விதிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கியானது சற்று முன்பு ஒரு நபர் 5 முறைக்கு மேல் ஏடிஎம் பயன்படுத்தினால் கட்டணத்தை ரூ 21 லிருந்து ரூ 23 ஆக உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. இதற்கு பல நபர்கள் தனது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து கருத்து ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியது, “ஏடிஎம்மில் மாத வரம்பிற்கு மேல் பணம் எடுப்பதற்கு ரூ.23 கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது” என்றும், “மக்கள் தங்கள் தேவைக்கு அதிகமாக பணம் எடுக்க இது வழிவகை செய்யும். ஏடிஎம் கட்டண உயர்வால் ஏழை மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்” எனவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.




