Oplus_131072
உன் உணர்சியை அடக்கிவிட்டு
என் உணர்வுகளை எழுப்பிவிட்டு
இரு நிமிடங்களில் நீ உறங்க சென்றுவிடுவாய்..
நடுநிசியில் நரம் தின்னும் காட்டேரி போல் என் காமம் எனை தின்று பேயட்டம் ஆடுதடா..
பிள்ளை பெற்றதால் நான் என்ன பிணமாகவாக மாறினேன்??
உணர்சிகளின்றி என் உள்ளத்தையும் உடலையும் உறங்க வைக்க???
கல்யாணம் முடித்து காலங்கள் கடந்ததால் என் கட்டுடல் என்ன கல்லாகவா போய்விட்டது ??
என் காமம் என்ன காணமலா போய்விட்டது ??
பிள்ளை கொடுத்தால்
ஆணமகனென்ற அங்கிகாரம் கிடைத்ததாக எண்ணி கொள்ளும்
எனையறியா என்னவனே
எப்போது நான் எனை மறந்து
உனை மறந்து உலகை மறந்து
உச்சத்தில் மயங்கி கிறங்கி
உறங்கி போகிறேனோ அப்போதுதான் நீ ஆண்மகன்..
பத்தினியை பட்டினியாக்கி
பக்கத்து வீட்டில் பல் இளித்து பேசி
படி தாண்ட வைக்க முயற்சி செய்வதில் பகல்வேசம் ஏனடா..
அவளிடம் மட்டும் என்ன அற்புதமா புரியப் போகிறாய்?
எனக்களித்த அரைகுறை காமம்
அதை தவிர வேறென்ன அறிவாய்..
காமத்தில் ஐம்புலனும் ஆத்மாவுடன் சங்கமிக்க வேண்டுமடா கண்டு
கேட்டு உண்டு இட்டு நுகர்ந்து
ஆத்மாவில் சங்கமிக்கும் காமத்தின் புனிதம் சடங்காக எனை புணரும் உனக்கெங்கே புரியும்..??
கண நேரம் எனை மறக்க
இணையத்தில் வளம் வந்தால்
நாய்களும் நரிகளும் எனை தின்ன
நல்லவன் போல் நயவஞ்சகமாய் பேசுதடா..
என்னிடம் இருந்து என்னை காக்க
நான் படும்பாடு நான் மட்டுமே அறிவேன்..
சற்று மனம் தடுமாறினாலும் வேசியென பெயர் வைக்க யாருக்கும் தயக்கமில்லை இங்கு..
காரணமறிந்து காதலுடன்
நிறைவான காமம் தந்தால்
மன்மதனே நேரில் வந்தாலும் மங்கையர்கள் மனமிறங்க மாட்டார்கள்..
இனியாவது எனை புரிவாயா??
இனிக்கும் இன்பம் தருவாயா??
மங்கைக்கும் மனதிருக்கு உணர்வாயா ??
மயங்க வைக்கும்படி புணர்வாயா??
♥♥♥
வேறு பெண்களுடன் உறவை வைத்து கட்டிய மனைவியை ஏங்க வைக்கும் துரோக ஆண்களினால் பாதிக்கப்படும் பல பெண்களின் ஏக்கங்கள் தான் இது.
😢😢😢




