கட்டுக் கட்டாக குப்பையில் கிடந்த பணம்..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் சாலையோரம் இருந்த குப்பையில் கட்டுக் கட்டாக பணம் இருந்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வேளச்சேரி அருகே சாலையோரத்தில் கருப்பு நிற பை ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் பையை திறந்துள்ளனர். அதில், பழைய ரூ.2000 மற்றும் புதிய ரூ.500 நோட்டுகள் இருந்துள்ளன. இதனைப் பார்த்து அதிர்ந்துபோன மக்கள், இது நல்ல நோட்டா? கள்ள நோட்டா? என குழப்பமடைந்தனர். தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

நெய் நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் 16 வகையான பலன்கள்..!!

Read Next

வங்கதேச கிரிக்கெட் வாரியம்..!! இந்தியாவில் டி20 ஆட்டங்கள் நடத்த ஐசிசி மறுப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular