Oplus_131072
கணவனுக்கு உள்ள சிறப்புகள்….
கணவன் என்றால் கட்டிக்காப்பவன் என்றும் கொள்ளலாம்
பணிக்குச் சென்று
மனைவி, குழந்தை,
குடும்ப பொறுப்புகள் அனைத்தையும் சுமக்கும்
சுமைதாங்கி்..
பணிசெய்யும் இடத்திலும் வேலைச் சுமை, வீட்டில் மனைவி, குழந்தை, பெற்றோர் ஆகிய அனைவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கடமைச் சுமை.
ஆண் என்பவன் ஆள்பவன்தான்
என்றாலும் அலுவலகத்தில் பணியாள்தான். வீட்டிலும் பணியாள்தான்.
மனைவியரே கொஞ்சம்
கை கொடுங்கள். உயிருள்ளவரை
உங்களை சுமந்து செல்லும் அந்த வாகனத்தை
பத்திரமாய் பார்த்துக்
கொள்ளுங்கள்
மனைவியரே, அவனுடைய சுமைகளை சற்று நேரம் இறக்கிவைத்து இளைப்பாறும் இனிய
வார்தைகளின் நிழலைத் தாருங்கள்.
மனைவிக்கு நலமில்லையென்றாலும் குழந்தைக்கு நலமில்லையென்றாலும் நேரம் காலம் பார்க்காமல், சோர்வை பாராமல் மருத்துவரிடம் சுமந்து செல்லும் கணவனை புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் மகளையும் மகனையும்
கவனிப்பது போல் உங்கள் கணவனையும்
கவனித்து கொள்ளுங்கள்
உடல் மனம் இரண்டையும்
மென்மை படுத்துங்கள்
பணிமுடிந்து களைத்துபோனாலும் வரும் வழியில், பால் வேண்டுமா, காய் வேண்டுமா, வேறு ஏதேனும் வேண்டுமா என்று பரிவோடு கேட்கின்ற கணவனை பாராட்டுங்கள்.
ஓய்வுபெறும் நாள்வரை அனைவருக்காகவும் உழைத்து, ஓய்வு பெற்றபின்னும் வீட்டுப்பணியை ஓய்வின்றி செய்கின்ற கணவனுக்கு
தினமும் உங்கள் மடியில் சிறிது நேரம் ஓய்வு கொடுங்கள்.
அவன் குடும்பத்திற்காக
கரைந்துபோகின்ற ஒரு
மெழுகுவர்த்தி.
வாழ்க்கை முழுதும் கூடவே வருகின்ற ஒரு சம்பளமில்லா
பாதுகாவலன்.
கடவுள் உன்னுடன்
இருக்கமுடியாது என்பதற்காக அனுப்பிவைத்த காவலன்தான் கணவன்.
அவன் கண்களில் சோர்வு
வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். கணவன் கலங்கும் நேரம் வந்துவிட்டால் அங்கே செல்வம் தங்காது.
புரிந்து கொள்ளுங்கள்.




