மனைவி…. யப்ப்ப்பப்ப்பா…
நேற்று மாலை சுமார் நாலு மணி இருக்கும் வீட்டுக்கு தேவையானதை வாங்கிட்டு கெளம்பினேன்… அப்ப பார்த்து போன்… பொண்டாட்டிகிட்ட இருந்து போன்… அப்புறம்…
சொல்லு செல்லம்
ஏங்க இன்னிக்கு என்ன தேதி
ஜூலை 20 .. ஏன்பா..
ஒன்னும் இல்ல… நீங்க வீட்டுக்கு வாங்க…
கொஞ்சம் பதட்டம் தான்… என்ன ஆச்சு.. ஏன் தேதியை கேட்டா… EB பில் கூட அடுத்த மாதம் தானே கட்டனும்…
பால் பணம் ஐந்தாம் தேதியே கொடுத்தாச்சே
கேபிள் டிவிக்கு கடன்காரன் மூனாம் தேதியே வந்துடுவானே
புள்ளைக்கு போன் பண்ணினேன்
ஏம்பா உங்கம்மா வுக்கு பிறந்தநாளா இன்னிக்கு
இல்லப்பா…
அவளுக்கு கல்யாண நாளா ப்பா
யப்பா…
சாரிடா.. எங்க கல்யாண நாளா
ஏம்பா உங்க கல்யாண நாள் கூட தெரியாமலா இருக்கீங்க
டேய் இப்ப அதாடா முக்கியம்.. இன்னிக்கு ஏதாவது விஷேச நாளா…
அப்படி ஏதுமில்லை ப்பா… ஏன்பா என்ன விஷயம்…
ஒன்னுமில்லை.. வச்சிடறேன்… அப்புறமா பேசறேன்
மண்டைக்குள்ள ஆயிரம் கொளவி கொட்டுன மாதிரி ஒரே குடைச்சல்..
யாருகிட்ட கேட்பது
பக்கத்து வீட்டு காயத்திரி அம்மாவுக்கு போன் பண்ணேன்
ஏங்க … வீட்ல தானே இருக்கீங்க…???
ஆமாங்க …
ஒன்னும் இல்ல… எனக்காக ஒரு எட்டு வீட்டுக்கு போய் பிரியா என்ன செய்றான்னு பாத்துட்டு வாறீங்களா … நான் பாக்க சொன்னேன் ன்னு சொல்லாதிங்க .. கோவமா இருக்காளான்னு மட்டும் பாத்து சொல்லும்மா…
பிரியா இவ்வளவு நேரம் இங்க தான் இருந்தாங்க… சந்தோஷமா தான் பேசிகிட்டு இருந்தாங்க… ஏங்க …
ஒன்னும் இல்லிங்க … நான் வந்து சொல்றேன்
தைரியத்தை வரவச்சிகிட்டு மனைவிக்கு போன் பண்ணேன்.. (எதா இருந்தாலும் போன்லயே கேட்டுடலாம்.. நேர்ல வேணாம்)
ஏண்டா செல்லம்… ஏதாவது வேணுமா
ஒன்னும் வேணாம்.. சீக்கிரம் வாங்க
ஏன் தங்கமே தேதி கேட்டே
ஒன்னும் இல்லீங்க… காலண்டர்ல ரெண்டு நாளா தேதி கிழிக்கல போல… அதாங்க…
சரிடாம்மா (அப்பாடா)
கொசுறு :
நாம அமைதியா இருந்தா அது யோகா
மனைவி அமைதியா இருந்தா அது யோகம்
அம்புட்டுதானுங்க வாழ்க்கை…???
படித்ததில் பிடித்தது.




