கணவன்மார்களே உங்களுக்காகத்தான் இந்த பதிவு..!! கட்டாயம் இந்த பதிவை படிங்க..!!

Oplus_131072

#கணவன் மார்களே, உங்கள் மனைவி உங்களுக்கு மரியாதை தர வேண்டுமென்று கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களே உங்களுக்கு மரியாதை தருகிற விதத்தில் நடந்துகொள்ளுங்கள். நடத்துங்கள்.

‘மனைவியை நன்கு புரிந்துகொள்ளுங்கள்; பெண்ணானவள் உங்களைவிடப் பலவீனமாக இருப்பதால், அவளுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுங்கள்’

தனியாக இருக்கும்போதும் சரி மற்றவர்களோடு இருக்கும்போதும் சரி, மனைவியிடம் அன்பாக, மரியாதையாக பேசுங்கள், கரிசனையாக நடந்துகொள்ளுங்கள்.

நீங்கள் பேசுகிற விதத்திலும், நடந்துகொள்கிற விதத்திலும் உங்கள் மனைவியை உயர்வாக நினைக்கிறீர்கள் என்பதை காட்டுங்கள்.

இப்படி செய்தால் உங்கள் #மனைவி உங்களை நேசிப்பாள், உங்களுக்கு மரியாதை கொடுப்பாள்.

நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்பும் காட்டும் மரியாதையும் பல மடங்காக உங்களுக்கு தூய்மையாக அவள் வெளிப்படுத்துவாள்..

மாறாக வெறுப்பையும் அவமரியாதையையும் நீங்கள் உங்கள் மனைவி மீது காட்டுவீர்கள் என்றாள் அவள் அதே வெறுப்பையும் அவமரியாதையும் பலமடங்கு உங்கள் மீது காட்ட தயங்கமாட்டாள்.

அன்போ வெறுப்போ அதை கடும் உறுதியாக வெளிப்படுத்துவது தான் பெண்களின் விசேட குனம்… என்பதை புரிந்துகொள்ளுங்கள் அன்பு ஆண்களே….

Read Previous

அறிவு தந்த வெகுமதி..!!அறிவு என்றைக்கும் நன்மையைத் தரும் என்பதை உணர்த்திய பதிவு..!!

Read Next

காய்த்த மரம்தான் கல்லடி படும்..!! அருமையான அனுபவமொழி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular