கணவன் மனைவிக்குள் சண்டைகள் வர மிக முக்கிய காரணம் என்ன?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

 

 

🌹தாம்பத்ய உறவில் நெருக்கம் இல்லாமை

 

🌹தினமும் சாப்பிடும் உணவு மனதிற்கு திருப்தி இல்லாமை (ருசி இல்லையா ?? உட்கார்ந்து சாப்பிட பொறுமை இல்லையா ?? )

 

🌹தூண்டி விடும் நெருங்கிய சொந்தம், பந்தம்.. யார் , ஏன் னு கண்காணியுங்கள்..‌

 

🌹ஏற்கனவே எரியறதில் எண்ணெய் ஊற்றும் நட்பு .. அட கட் பண்ணுங்க.‌.

 

🌹பொருளாதார சிக்கல் கடன் , வரதட்சனை குறைவு ,

 

🌹 சம்பளம் குறைவு , வியாபார நஷ்டம் இணைந்து சரி பண்ணுங்க..‌

 

🌹பேசாத பேச விரும்பாத கணவன் , குத்தி குத்தி காட்டி பேசும் மனைவி

 

🌹அடுத்த வீட்டு பெண் போல மனைவி அழகு இல்லை ,

 

🌹 அடுத்த வீட்டு ஆண் போல கணவனுக்கு சாமர்த்தியம் பத்தலை என்ற வீணா போன நினைப்பு

 

🌹அதிக அளவிளான வேலைகள் , உடம்பு வலி , போதுமான நேரம் எடுத்து ஒருவரின் கஷ்டத்தை மற்றவர் பேசி புரிந்து கொள்ளாமல் இருப்பது..

 

🌹தான் தோன்றி தனமாக தன் இஷ்டத்திற்கு நடப்பது ‌‌ .. கணவன் மனைவி இருவருமே.. கலந்தாலோசித்து செய்வது இல்லை..‌

 

🌹மரியாதையாக பேச தெரியாதது , நடத்த தெரியாதது ….ஒருவரை ஒருவர் பொது இடத்தில் மரியாதையுடன் நடத்த வேண்டும்.. கிண்டல் என்ற நினைப்பில் அவமரியாதை பண்ணுவது மன குமுறலை ஏற்படுத்தும்.. ஒரு நாள் வெடிக்கும்..‌

 

🌹சலிப்பு , வெறுப்பு ,, தொடர்ந்து வேலையே செய்து ,4 சுவரையே பார்த்தால் வெறுப்பு , சலிப்பு வரும்.. ஆறு நாட்கள் வொர்க் பிரம் ஹோம் ல இருக்க ஆண்களை கேளுங்கள்.. வெளியே போயே ஆகணும் னு சொல்வாங்க..‌ ஆனால் காலம் காலமாக வீட்டுக்கு ள்ளேயே இருக்கும் பெண்கள்‌ நிலை !????

 

🌹வாஸ்து சரி இல்லை.. வீட்டை மாத்தணும்.. ஓயாத சண்டை போடும் அக்கம் பக்கம் வீடுகள், எப்போ பார்த்தாலும் வந்து கணவன் மனைவியை வேவு பார்க்கும் நபர்கள் , அதிக தூரம் பயணம் செய்து வீட்டிற்கு வர வேண்டிய கணவன் , வெளியூர் ல இருந்து வாரம் ஒரு நாள் மட்டும் வரும் கணவன் , 6 நாள் இங்கு என்ன குத்தல் பேச்சு எல்லாம் அந்த மனைவி கேட்க வேண்டியது உள்ளது னு தெரியாது ..

 

அட கொஞ்சம் வீட்டை மாத்தி தான் பார்ப்போமே !!!

Read Previous

பத்து நிமிடத்தில் ஈஸியான ரவா லட்டு செய்வது எப்படி..??

Read Next

இந்த பயனுள்ள சமையல் குறிப்புகள், உங்களின் சமையல் திறனை மேம்படுத்தி, தினசரி சமைப்பை சுலபமாக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular