கணவன் மனைவிக்கு இடையே எந்த மாதிரியான புரிதல் இருக்க வேண்டும் தெரியுமா..??

Oplus_131072

 

நம்ம சுயசரிதையையே இதற்கு சொல்லி விடலாம்.

• என் துணைவியார் ‘என்ன சமைப்பது’ என்று கேட்டார். “உனக்கு எது சுலபமானதோ அதை செய்” என்றேன்.

• எங்கள் திருமணம் முடிந்து 23 ஆண்டுகள் ஓடிவிட்டது ‌. இன்று வரை “இந்த சமையல் செய் ” என்று சொன்னதே இல்லை.

• ஓரோர் சமயம் “முத்தம் மட்டும் போதும்” என்று சொன்னதுண்டு. அன்றைய தினத்தின் முத்தங்கள் அனைத்தும் ஸ்பெஷலாக இருக்கும்.

• அந்த தினங்களில் (3 முதல் 5 தினங்கள்) அவர்களை தொந்தரவு செய்வது இல்லை.

• வாரம் ஒருமுறை சமையல் (ஞாயிறு) என் பொறுப்பு. காலை முதல் இரவு வரை. பாத்திரம் கழுவுதல் உட்பட.

• உடல் நிலை சரியில்லாமல் போனால் லீவ் போட்டு விட்டு அருகில் இருப்பது

• வீட்டில் நிதி மந்திரி அவள் தான். சரியாக செலவுகளை குறைத்து சேமிப்பு அதிகம் ஆக்கியது அவள்தான். நமக்கு அது சரியாக வரவில்லை.

• வீட்டை அழகுபடுத்த அவளால் மட்டுமே முடியும். அதனால் அவளை “Housewife” என்று சொல்லாமல் “Home Maker” என்றே சொல்வேன்.

• ஒன்றிரண்டு வெள்ளி முடிகள் அவள் தலையில் தெரிவதால் சிறிது கவலை அவளுக்கு. “அதற்கு தங்க (gold) கலர் அடித்து தங்க வை” என்றேன்.

• எனது வெள்ளை முடியை கறுப்பாக ஆக்க வேண்டும் என்று அவளது ஆசை. “அஜீத் மாதிரி ஸால்ட் & பெப்பர் லுக் ல இருக்கட்டும்” என் மறுத்து விட்டேன். (அவள் அஜீத் ஃபேன்)

Read Previous

நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

உங்க வீட்டில அசைவம் செய்யும்போது கண்டிப்பா இந்த குறிப்புகளை எல்லாம் ஞாபகத்துல வச்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular