Oplus_131072
கண்டு காய் காய்க்கும்
காணாமல் பூ பூக்கும்
அத்தி மரத்தினைப்பற்றிய
அரிய தகவல்கள்!
எல்லாவித செடி கொடிகளும் மரங்களும் மலர்வதை/பூப்பதைக் காணமுடியும்…
ஆனால் அத்தி மரம் பூப்பதைக் காணமுடியாது…
கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்று பழமொழி உண்டு.
அதாவது காய்ப்பது மட்டும்தான் தெரியும். பூப்பதே தெரியாதே
பயிரினங்கள் பூத்துக் காய்த்துக் கனிவதே வழக்கம் என்றாலும் பூக்காமல் காய்க்கும் மரவகையைச் சேர்ந்தது அத்தி ஆகும்…
ஆகவே அத்திப்பூக்களை எந்நாளும் பார்க்கவே முடியாது…
எனவேதான் அரிதாக, அதிசயமாக நடக்கும் நிகழ்வுகளை
அத்திப்பூத்தாற்போல என்று குறிப்பிடுவார்கள்…
அதனால்தான் சுக்ரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது.
சுக்ரனுடைய செயல்பாடு என்பது வித்தியாசமாக இருக்கும்
சுக்ராச்சாரி நேரடியாக மோதமாட்டார். மறைந்து நின்று தாக்கக்கூடியவர் சுக்ராச்சாரி.
அதேபோல இந்த அத்தி மரத்தைப் பார்த்தாலும், கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும் என்பது பொருத்தமாக இருக்கிறது.
கணவன், மனைவி இடையே
சண்டை, சச்சரவு, சிக்கல்கள் போன்று இருப்பவர்கள்,ஜாதகத்தில் சுக்ரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்ரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம் என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே கணவன், மனைவி இடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும். இணக்கமான சூழல் உருவாகும்.
தாம்பத்ய சிக்கல்கள் நீங்கும்.
நல்ல மனைவி, வீடு, வாகனம், மகிழ்ச்சியான வாழ்க்கை உள்ளிட்ட அனைத்து நற்பலன்களையும் தருபவர் சுக்கிரன் ஒருவரே.
ஜோதிட விதிகளின் படி, சுக்கிரன் பொருள் வசதிகள், திருமண வாழ்க்கை, ஆற்றல், அழகு மற்றும் காதல் விவகாரங்களில் இனிமை போன்றவை தருபவர்
அதனால் லௌகீக வாழ்க்கைச் சுகங்களுக்கு சுக்கிரனே அதிபதியாகிறார்
அத்தி மரத்திலிருந்து வரக்கூடிய வைப்ரேஷன் என்று சொல்வோமே அது கணவன், மனைவி இடையே அன்யோன்யத்தைக் கொடுக்க கூடியது.
அதனால்தான் வாழ்க்கை வளம் பெறுவதற்கும், கணவன் மனைவிக்குள் நெருக்கம், கடைசி வரையில் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக விரும்பி விலகாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு வீட்டிலுமே அத்தி மரம் இருந்தால் மிகவும் விசேஷமாக இருக்கும்.
இதுபோன்ற வைப்ரேஷன்கள் அத்தி மரத்திற்கு அதிகம் உண்டு.
அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தியானம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் நமக்கு கிடைக்க செய்யும்.
இதுபோன்ற அபார சக்தியும் அத்தி மர பலகைக்கு உண்டு.
ஒரு இடத்தில் அத்தி மரம் இருக்கிறதென்றால் அதற்கு கீழே நீரோட்டமும் நன்றாக இருக்கிறது என்பது அறிகுறி.
பூமிக்கு அடியில் நீரூற்று, நீரோடை குறைந்த அடிகளில் இருக்கும் என்ற ஐதீகமும் உண்டு. இதனை பரிசோதித்து பார்த்திருக்கிறார்கள்
அத்திப் பழத்தில் செய்த சிலவற்றை எல்லைத் தெய்வங்களுக்கும்,மற்றும்
சக்தி பீடங்கள் என்று சொல்லப்படும் காஞ்சி காமாட்சி, ஆதிசங்கரர் செய்த சக்தி 108 சக்தி பீடங்களில் உள்ள அம்பாளுக்கு நெய் வேத்தியமாக அதனை பயன்படுத்துகிறார்கள்.
அத்தி பழத்தில் அடை மாதிரி தட்டி அதனை நெய் வேத்தியத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.
இதுபோன்று அம்பாளுக்கு வைப்பதன் மூலம் நிறைய சக்தி கிடைக்கும்
மதுரையில் திருக்குறள் அரங்கேற்றம் செய்யப்பட்ட சங்கப்பலகையானது, இந்த அத்தி மரத்தில் வைத்துதான் செய்யப்பட்டது.
சரியானதா, தகுதியானதாக தரமானதா இருந்தால் அந்த ஓலைச் சுவடி கட்டு அத்தி மரப் பலகையில் நீடிக்கும்,
இல்லையென்றால் மூழ்கிவிடும்.
இதுபோன்ற தெய்வீகச் சக்தி உடையது இந்த அத்தி மரம்.
நீங்கள் சகலகலா வல்லவனாக மாறுவதற்கும். திறமைசாலின்னா அது நீங்கள் தான என சொல்வதற்கும் இந்த அத்தி மர இலைகளை கொண்டு செய்ய வேண்டிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி பார்ப்போமா?
இது ஆண்களுக்கும் பொருந்தும். பெண்களுக்கும் பொருந்தும்.
பெண்களாக இருந்தால் நீங்கள் சகலகலாவல்லி என்று நினைத்துக் கொள்ளலாம்.
ஆண் பெண் யார் வேண்டும் என்றாலும் இந்த அத்தி மர இலைப்பரிகாரத்தை செய்யலாம்.
இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கினால் உங்களுடைய மந்தத்தன்மை நீங்கும்.
சோம்பேறித்தனம் உடம்பை விட்டு நீங்கும்.
சுறுசுறுப்பாக செயல்பட்டு புத்தி கூர்மையோடு ஞாபக சக்தியுடன் உங்களுடைய வேலையை செய்வீர்கள்.
குறிப்பாக படிக்கின்ற குழந்தைகள் இந்த பரிகாரத்தை செய்தால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மங்கி போன புத்தி கூட மீண்டும் சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கும்.
புத்திசாலித்தனத்திற்கு உரிய கிரகம் சுக்கிர பகவான்.
கலைகளின் அதிபதி சுக்கிரன்தான். இசை, நடனம், பாட்டு, நடிப்பு போன்ற அனைத்துக்கும் அடிப்படை இவர்தான்
சுக்கிரபகவானுக்கு உரிய சமித்து இந்த அத்தி மரம்.
அத்தி மரத்திற்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி அதிகமாக உள்ளது.
நாம் எதை நினைத்துக் கொண்டு இந்த அத்தி மர இலையால் இறைவனுக்கு அர்ச்சனை செய்கின்றோமோ அது
உடனடியாக நடக்கும்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு முதலில் தேவைப்படுவது அத்திமர இலைகளாகும்.
அத்தி மர இலை. பரிகார பூஜைக்கு தினமும் இந்த அத்தி மர இலைகள் தேவைப்படும்.
ஆகவே தெரிந்த இடத்தில் சொல்லி வைத்து அத்தி மர இலைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள சிவன், பெருமாள், அம்மன் என்ற எந்த சுவாமி படம் உங்கள் வீட்டில் இருந்தாலும் சரி, அந்த தெய்வத்திற்கு அத்தி மர இலையால் மாலை கட்டியும் போடலாம்.
அப்படி இல்லை என்றால் அத்திமர இலைகளை வைத்து அர்ச்சனையும் செய்யலாம்.
இப்படி தினந்தோறும் அத்திமர இலைகளைக் கொண்டு வீட்டில் இருக்கக்கூடிய இறைவனுக்கு வழிபாடு செய்து வந்தால், உங்களுடைய திறமை மேலோங்கும் என்று சொல்லப்படுகிறது.
மறைந்திருக்கும் உங்களின் திறமை வெளிப்பட தொடங்கி விடும்.
இறுதியாக அத்தி மரத்தை பற்றிய மற்றொரு சுவாரசியமான விஷயம் இதோ உங்களுக்காக.
அத்தி மரத்தைக் கொண்டு சிறிய முக்காலியாக செய்து கொள்ளுங்கள்.
அதாவது தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்துவார்கள் அல்லவா முக்காலி.
அதுபோல சிறிய முக்காலி ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள்.
இதன் மேலே தினமும் அகல் விளக்கு ஏற்றி பூஜையறையில் அம்பாளை வழிபாடு செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் கடன் சுமை குறையும்.
பண வரவு அதிகரிக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்
மேலும் இது போன்று பூக்காமல் காய்க்கும் மரங்களான அத்தி, ஆல், பலா, அரசு முதலிய மரவகைகளை ‘வனஸ்பதி’ எனறும். புஷ்பங்கள், பழங்களுடனுள்ள மற்றவை “மரங்கள்” எனப்படும் என்கிறார் மனு.
Apushpaa: falavanto ye te vanaspataya smruthaa:
Pushpina: falinas cha eva vrukshaam tu ubayata smruta: (1-47 Manu)
அபுஷ்பா: பலவந்தோ யே தே வனஸ்பதய ஸ்ம்ருதா:
புஷ்பின: பலினஸ் ச ஏவ வ்ருக்ஷாம் து உபயத ஸ்ம்ருதா:
*வனஸ்பதி*எனப்படும் பூக்காமல் காய்க்கும் அத்தி, ஆல், பலா, அரசு முதலிய மரங்களுக்கும் வைப்ரேஷன் அதிகமாக உண்டு என்பதால் இந்த மரங்கிளன் அடியில் அமர்ந்து செய்யப்படுகின்ற தியானம் விரைவில் சித்திக்கும் என்ற தகவலுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.




