காரணமே தெரியாமல் கருணைக்கிழங்கை ஒதுக்குபவர்கள் அதிகம், ஆனால் கருணைக்கிழங்கில் உள்ள சத்துக்களை யாரும் அறிவதே இல்லை கருணைக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து கிடைக்கிறது..
கருணைக்கிழங்கில் வைட்டமின் சி மற்றும் பி பொட்டாசியம் இரும்புச்சத்து போன்றவை இதில் நிறைந்துள்ளன, வேறு எந்த கிழங்கிலும் இல்லாத அளவுக்கு கருணைக்கிழங்கில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது, பசியை தூண்டி இரைப்பைக்கு பழம் சேர்ப்பதுடன் மூல நோயாளிகளுக்கு நல்லதோர் வரப்பிரசாதமாக இருப்பது கருணைக்கிழங்கு தான் குறிப்பாக பிடி கருணை எனப்படும் கருணையில் தான் இந்த சிறப்பு இருக்கிறது, உடல் சூட்டினை குறைத்து அதன் மூலம் உடலை ஆரோக்கியமாகவும் உடலில் உள்ள நோய்களை குணப்படுத்துவதற்கும் கருணைக்கிழங்கு சிறந்தாக விளங்குகிறது, மேலும் உடல் ஆரோக்கியத்திறகும் மரணம் இல்லா பெருவாழ்வுக்கும் கிழங்கு வகை உண்ணாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் வள்ளலார் கருணைக்கிழங்கை மற்றும் சாப்பிடலாம் என்றும் கூறியுள்ளார், கருணைக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்..!!




