கரும்பு ஜூஸ் அதிகம் குடிப்பீர்களா…..
நம்மில் பலருக்கும் சில்லென்று ஜூஸ் குடிப்பது மிகவும் பிடிக்கும். ஒரு சிலருக்கு ஒரு விதமான ஜூஸ் பிடிக்கும். ஒரு சிலருக்கு ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் ஒரு சிலருக்கு மாதுளம் பழம் ஜூஸ் பிடிக்கும் ஒரு சிலருக்கு கரும்பு ஜூஸ் பிடிக்கும். இந்நிலையில் கரும்பு ஜூஸ் அடிக்கடி குடிப்பவர்களும் ஏன் தினமும் குடிப்பவர்களும் கூட இருக்கிறோம். கரும்பு ஜூஸ் அதிகம் குடிப்பது நல்லதா இல்லை கெட்டதா என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என பழமொழி கூறப்படுவதுண்டு. அந்த வகையில், கோடைகாலத்தில் கரும்புச் சாறை அதிகம் பருகுவது ஆபத்து என ICMR கூறியுள்ளது. பொதுவாகவே, கரும்பில் இருந்துதான் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சர்க்கரை அளவை அதிகம் கொண்டுள்ள கரும்புச் சாறை அதிகளவில் குடிப்பதால், பின்நாள்களில் உடல்நிலை சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ICMR எச்சரிக்கை விடுத்துள்ளது….




