பூண்டு அதிகமாக சேர்த்துக் கொள்ளும் போது உடலுக்கு ஏற்படும் தீங்கு..!!

அளவிற்கு அதிகமாக பூண்டை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அது ஆபத்தை கொடுக்கிறது.

பொதுவாகவே நாம் சமைக்கும்போது பூண்டை சேர்த்து சமைப்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. இதில் அயோடின் சல்பர் குளோரின் ஒன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

ஆனால் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. பூண்டு அதிகமாக சாப்பிடும் போது சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு ஏற்படும்.

பச்சை பூண்டு சாப்பிடுவதால் மூளையில் உள்ள முக்கோண நரம்பு தூண்டப்பட்டு தலைவலியை ஏற்படுத்தும். மேலும் நீங்கள் பூண்டு அதிகமாக சாப்பிட்டால் ரத்தப்போக்கு பிரச்சனை மற்றும் அறுவை சிகிச்சை காயம் இருந்தால் மிகவும் ஆபத்தை உண்டாக்கும்.

பூண்டில் அல்லிசின் இருப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை அதிகப்படுத்தி கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து சல்பர் அதிகமாக இருப்பதால் வாய் துர்நாற்றத்தையும் கொடுக்கும்.

பூண்டில் அதிகப்படியான சேர்க்கும்போது வாய்வு தொல்லை வயிற்று வலி மற்றும் குமட்டல் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

இப்படி பூண்டை நாம் அதிகமாக சேர்த்துக் கொள்ளும்போது நம் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே அளவாக சேர்த்து ஆரோக்கியமாக வாழ்வதே சிறந்தது.

Read Previous

இன்றைய மருத்துவ குறிப்பு..!! வாழைத்தண்டு ஜூஸில் ஒளிந்துள்ள மருத்துவ பயன்கள்..!!

Read Next

கரும்பு ஜூஸ் அதிகம் குடிக்கும் நபரா நீங்கள்..?? இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular