சுவையான கருவேப்பிலை சாதம் செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம் இது எளிமையாகவும் விரைவாகவும் செய்யக்கூடியது என்பதால் நேரம் மிச்சமாகும்…
கருவேப்பிலை சாதம் எவ்வாறு சுவையாக செய்ய வேண்டுமென இதில் காணலாம் மிகக் குறைந்த நேரத்திலேயே செய்யக்கூடிய இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்தமான சுவையில் இருக்கும், தேவையான பொருட்கள் ஒரு கை கருவேப்பிலை ஒரு கை கொத்தமல்லி 3 பச்சை மிளகாய் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் சிறிய துண்டு இஞ்சி எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை இரண்டு டேபிள்ஸ்பூன் வேர்க்கடலை சிறிது முந்திரி சிறிது வரமிளகாய், மஞ்சள் தூள் உப்பு இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, செய்முறை ஒரு கப் அளவிற்கு வடித்த சாதத்தை நன்றாக ஆர வைக்க வேண்டும் ஒரு கை கொத்தமல்லி ஒரு கை கருவேப்பிலை மூணு பச்சை மிளகாய் 3 டேபிள்ஸ்பூன் தேங்காய் சிறிதியை துண்டு இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு பச்சை கடலை சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் வேர்கடலை சேர்த்து சிறிது முந்திரி, சிறிது வரமிளகாய் ஆகியவை சேர்த்து வதக்க வேண்டும் பின்னர் இத்துடன் சாதம் மற்றும் முதலில் அரைத்த கலவையும் சேர்த்து வதக்க வேண்டும் மேலும் தேவைக்கு ஏற்ப மஞ்சள் தூள் உப்பு சேர்க்க வேண்டும் இறுதியாக இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து எடுக்க வேண்டும் இதோ கருவேப்பிலை சாதம் தயார்..!!!




