கருவேப்பிலை சமையலுக்கு மட்டுமல்ல மருத்துவ குணம் நிறைந்து காணப்படுவதால் இதனை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்…
கருவேப்பிலை சமையலில் தாளிப்புகளில் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது இதன் மனம் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக இது சமையல் சேர்க்கப்படும் பட்சத்தில் இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது என்பது பலருக்கு தெரியாத ஒன்றாகும், கருவேப்பிலை இலைகளில் அதிக அளவு இரும்புச்சத்து கால்சியம் புரதங்கள் வைட்டமின் ஏ சி பி ஆக்ஸி நெற்றிகள் உள்ளிட்ட கூறுகள் இருக்கிறது இது நமக்கு தலைமுடிக்கு நன்மைகளை தயக்கக்கூடியது என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது, அந்த கருவேப்பிலை தண்ணீர் நமது தலை முடி உதிர்வதை தடுத்து புதிய முடி நன்கு வளர பெரும் பங்கினை வகிக்கிறது என்று பரிந்துரை செய்யப்படுகிறது அப்படி பலன்களை அள்ளிக் கொடுக்கும் கருவேப்பிலை தண்ணீர் எப்படி தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது என்று இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம், ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்துக் கொள்ளுங்கள் அதனை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவ வேண்டும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள் தண்ணீர் கொதித்ததும் அதில் கருவேப்பிலை இலைகளை போடவும் தண்ணீரின் நிறம் மாறியதும் இறக்கவும் அவ்வளவுதான் கருவேப்பிலை தண்ணீர் தயார், கருவேப்பிலை தண்ணீரை எடுத்து உங்கள் தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து முடியை அலசவும் அல்லது உங்கள் ஷாம்புடன் சேர்த்து பயன்படுத்தலாம். மீதமுள்ள தண்ணீரை பிரிட்ஜில் சேமித்து வைத்து ஒரு மாதம் காலம் வரை பயன்படுத்தலாம், தலைமுடியில் இந்த தண்ணீரை பயன்படுத்தி வருவதன் மூலம் தலைமுடி உதிர்வதை தடுக்க முடியும் மேலும் வலுவான முடி பெறுவதற்கு வழிவகுக்கிறது தலைமுடியின் பிளவுகள் குறைய துவங்கும் வேர்களில் இருந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும், கருவேப்பிலை தண்ணீரில் சக்தி வாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் இருக்கிறது. இது நமது உச்சந்தலையில் படும் பொழுது அதில் ஏற்படும் நோய் தொற்றுகள் குணமாகும்,இந்த தண்ணீரின் பயன்பாடு வறட்சியான தலைமுடி உள்ளவர்களுக்கு நல்ல தீர்வினை குறிக்கிறது தலைமுடியை இது மென்மையாக மாற்றுவதோடு முடிக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கும் மாசு காரணமாக தலைமுடிக்கு ஏற்படும் சேதத்தை தடுக்கும் ஆற்றல் இந்த கருவேப்பிலை தண்ணீருக்கு அதிக அளவில் இருக்கிறது இதிலிருந்து ஆக்சிடனேற்ற உள்ளடக்கம் நமது தலை முடி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தீங்கான விளைவுகளில் இருந்து தலைமுடியை பாதுகாக்கும்..!!




