கரூர் மாவட்டம் கோடங்கிப்பட்டியில் திமுக கட்சியின் சார்பில் “முப்பெரும் விழா” இன்று (செப்.17) நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் அவர், “அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு திராவிடம் என்றால் என்னவென்று தெரியாமல் இபிஎஸ் இருக்கிறார். அண்ணாயிசமாக இருந்த அதிமுக கொள்கையை, அடிமையிசமாக மாற்றி, அமித்ஷாவே சரணம் என அவர் சரண்டர் ஆகிவிட்டார்” என்று விமர்சித்துள்ளார்.




