கரூர் கூட்ட நெரிசல் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகள் கொண்ட 7 பொதுநல வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் தண்டபானி, ஜோதிராமன் அமர்வு முன்பு வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுக்கள் முதலில் விசாரணைக்கு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




