மயிலாடுதுறை குத்தாலத்தைச் சேர்ந்த சூர்யா (35) தனது குடும்பத்துடன் ஈரோட்டில் உள்ள மாமியார் வீட்டிற்கு ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். நேற்று முன்தினம் ஈரோடு சாவடிபாளையம் பகுதியில் ரயில் வந்துகொண்டிருந்தபோது, படிக்கட்டுக்கு அருகில் நின்றிருந்த சூர்யாவும் அவரது மகள் நிவாஷினியும் (4) தவறி கீழே விழுந்தனர். உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து மனைவி ரயிலை நிறுத்தினார். படுகாயமடைந்த இருவருக்கும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




