கரூர் மாவட்டத்தில் 326.50 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு..!!

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. கரூரில் 13.60 மிமீ, அரவக்குறிச்சியில் 5 மிமீ, அணைப்பாளையத்தில் 4.20 மிமீ, க.பரமத்தியில் 21 மிமீ, குளித்தலையில் 23.60 மிமீ, தோகைமலையில் 9.60 மிமீ, கிருஷ்ணராயபுரத்தில் 24.50 மிமீ, மாயனூரில் 17 மிமீ, பஞ்சபட்டியில் 116 மிமீ, கடவூரில் 22 மிமீ, பாலவிடுதியில் 50 மிமீ, மைலம்பட்டியில் 20 மிமீ என மொத்தம் 326.50 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 27.21 மிமீ என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read Previous

ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள்..!!

Read Next

பச்சிளம் குழந்தையை பிரிட்ஜில் வைத்த தாய்.. பதறவைக்கும் சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular