வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதன் மூலம் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கலாம். ஏனெனில் வெள்ளரிக்காய் 96% தண்ணீர் சத்துக் கொண்டது. அதனால் இந்த கோடை காலத்தில் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டை போக்க இது மிகவும் உதவுகிறது. அது மட்டும் இன்றி வெள்ளரிக்காயில் உள்ள தண்ணீர் சத்து உடலின் வெப்பநிலையை குறைக்க உதவுகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. வெள்ளரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவும் செரிமானத்தை மேம்படுத்தவும் இந்த வெள்ளரிக்காய் மிகவும் உதவுகிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களும் வெள்ளரிக்காயை சாப்பிடலாம். ஏனெனில் வெள்ளரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு. அதனால் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்ற உணவாக இந்த வெள்ளரிக்காய் அமைகிறது. அதுமட்டுமின்றி வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன வெள்ளரிக்காயில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மிகவும் உதவுகிறது வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது அது மட்டும் இன்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

 

எனவே அனைவரும் இந்த கோடை காலத்தில் வெள்ளரிக்காயை சாப்பிட மறக்காதீர்கள்.

Read Previous

கர்ப்பிணி பெண்களுக்கு உதவக்கூடிய அற்புதக்கீரை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

அவித்த வேர்க்கடலை சாப்பிடுவதால் ஞாபக சக்தி அறிவாற்றல் மேம்படும் என்று சொன்னால் நம்புவீர்களா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular