Oplus_131072
உலக அளவில் ஏற்படும் இறப்புகளில் இது 4 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கல்லீரல் நோய்கள் என்பது இறப்புக்கான ஒரு முன்னணி காரணமாகவும் அமைகிறது. மேலும் வாழ்க்கை முறை காரணிகள் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.
2023 ஆம் ஆண்டு வெளியாகி உள்ள தரவுகளின் அடிப்படையில், உலக அளவில் கிட்டத்தட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் ஒவ்வொரு வருடமும் கல்லீரல் நோய்களால் இறக்கின்றனர். உலக அளவில் ஏற்படும் இறப்புகளில் இது 4 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கல்லீரல் நோய்கள் என்பது இறப்புக்கான ஒரு முன்னணி காரணமாகவும் அமைகிறது. மேலும் வாழ்க்கை முறை காரணிகள் இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.
உணவு கல்லீரலோடு ஒரு நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. மோசமான உணவு சாப்பிடும் பழக்க வழக்கங்கள் காரணமாக நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு முன்னணி இரைப்பை குடல் நிபுணரான டாக்டர் சௌரப் சேதி அவர்கள் கூறுகிறார். ஒரு சில பானங்களைப் பருகுவது கொழுப்பு கல்லீரல் நோய்களை எப்படி மோசமாக்கும் என்பது பற்றி மருத்துவர் விவரிக்கிறார். ஒரு சில பிரபலமான பானங்கள் கல்லீரலில் ஏற்படும் தாக்கங்களைப் பொறுத்து அதற்கான தரவரிசை ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். அவர் பகிர்ந்து உள்ள அந்தப் பட்டியலில் போபா டீ சம்பந்தப்பட்ட விளைவுகள் பற்றி பேசியுள்ளார்.
சாஃப்ட் டிரிங்க்ஸ்: உலக அளவில் பலரால் விரும்பி பருகப்பட்டாலும், இந்த பானங்களால் கல்லீரலுக்கு மோசமான விளைவுகள் உண்டாகிறது. சர்க்கரைகளால் நிரப்பப்பட்ட இந்த பானங்கள் இன்சுலின் அளவுகளை அதிகரித்து, நாளடைவில் இன்சுலின் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.
இன்சுலின் எதிர்ப்பு திறன் என்பது கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுவதற்கான ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது. நாளடைவில் இந்த அதிகப்படியான சர்க்கரை, கொழுப்பை செயல்முறைப்படுத்தும் கல்லீரலின் திறனை பாதிக்கிறது. இதனால் கல்லீரல் செல்களில் கொழுப்பு படுகிறது. கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இந்த பானங்களை எடுத்துக் கொள்ளும்போது அது இன்னும் விளைவுகளை உண்டாக்கும்.
எனர்ஜி டிரிங்ஸ்: விளையாட்டு மற்றும் தடகள வீரர்கள் இடையே பிரபலமாக பயன்படுத்தப்படும் இந்த பானங்கள் செயல் திறனை ஊக்குவிக்கவும், உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கவும் செய்யும் என்று சந்தைப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமான ஒன்றாக போர்வை போர்த்திக் கொண்டாலும், உண்மையில் சாஃப்ட் டிரிங்ஸ் போலவே இந்த பானங்களிலும் அளவுக்கு அதிகமான சர்க்கரைகள் காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட சுகர் பாம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பானமானது நன்மையை காட்டிலும் அதிக அளவு தீமையை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
போபா டீ: போபா டீ என்பது அனைவரும் ஆசைப்பட்டு பருகும் ஒரு பிரபலமான பானமாக இருந்து வருகிறது. இதனை பருகும் போது நமக்கு ஒரு தனித்துவமான அனுபவம் கிடைக்கிறது. ஆனால் அடிக்கடி இந்த பானத்தை பருகுவது கல்லீரலில் மோசமான தாக்கத்தை உண்டாக்கும். இதற்கு காரணம் போபா டீயில் உள்ள அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள். சொல்லப்போனால், இந்த பானத்தை அடிக்கடி பருகுவது கொழுப்பு கல்லீரல் நோயை சத்தம் இல்லாமல் தீவிரமாக்குகிறது என்று மருத்துவர் கூறுகிறார்.




