கல்லூரி சென்ற முதல் நாளிலேயே சோகம்: ரயில் மோதி 18 வயது மாணவி உயிரிழப்பு..!!

 

சென்னை குரோம்பேட்டையில் கல்லூரிக்கு சென்ற முதல் நாளிலேயே ராஜஸ்ரீ (18) என்ற மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் படிக்கச் சென்ற ராஜஸ்ரீ, ரயில்வே கேட்டை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வாழ்க்கையை தொடங்கிய முதல் நாளிலேயே மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Read Previous

ரூ.18 கோடி மோசடி பணப் பரிவர்த்தனை: தவெக நிர்வாகி கைது..!!

Read Next

அக்சென்ச்சரில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular