கடந்த 25-ந் தேதி பேடராயனபுராவில் உள்ள அர்பியா கவுசர் வீட்டுக்கு முகமது காசிம் சென்றபோது, அவரை கையும் களவுமாக பிடித்த முகமது அக்பர் தனது உறவினர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த முகமது காசிம் ராமநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது காசிமை கொலை செய்ததாக கள்ளக்காதலி அர்பியா கவுசர், அவரது கணவர் முகமது அக்பர் மற்றும் உறவினர்கள் ஓவைஸ் வாசா, முகமது சாந்த் பாஷா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




