காசா நகரின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 9 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பின் இலக்குகளை குறிவைத்தே இந்த வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. தாக்குதலின் பின்னணியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.




