சோனம் வாங்சுக் அகற்றப்பட்ட விவகாரம்: பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜித் தீப்கே..
டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்ட சம்பவத்திற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இது முற்றிலும் தவறான நடவடிக்கை. இதுபோன்ற செயல்களை இந்திய அரசியலமைப்பு ஒருபோதும் அனுமதிக்காது. இது அப்பட்டமான சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு” என்று விமர்சித்தார்.
மேலும், “இந்த இழிவான சம்பவத்துக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




