உத்தரப்பிரதேசத்தின் சந்தௌலியில் காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த காதலன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். பழ வியாபாரியான சஞ்சய் என்பவர், தனது காதலி சபியா பானோவின் வீட்டிற்குள் நுழைந்து நேற்று துப்பாக்கியால் சுட்டுள்ளார். தொடர்ந்து தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். காயமடைந்த சபியாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.




