எத்தியோப்பியாவில், வடக்கு ஷேவா மண்டலத்தில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் வழிபாடு நடந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து நேரிட்டுள்ளது. திடீரென மரச் சாரம் இடிந்து விழுந்ததில் அங்கிருந்தவர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கி கொண்டனர். இந்த துயர விபத்தில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.




