Oplus_131072
காந்தி கணக்கு என்பதற்கான உண்மையான பொருள்
1930களின் தொடக்கத்தில் காந்தி தலைமையில் ‘உப்பு சத்தியாகிரக’ போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் பல்வேறு தரப்பு மக்களும் ஈர்க்கப்பட்டனர். ஆனால், சில வியாபாரிகளால் இதில் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. தார்மீக ஆதரவையும் தாண்டி ஏதாவது செய்ய விரும்பிய அந்த வியாபாரிகள்,
போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கூட்டம் கூட்டமாக செல்லும் மக்கள் தங்கள் கடைகளில் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டாலோ அல்லது கடைகளில் சாப்பிட்டாலோ அதற்குப் பணம் தர வேண்டாம், காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரக போராட்டத்திற்கு நாங்கள் கொடுக்கும் ஆதரவாக இது இருக்கட்டும் என்றனர்.
அப்போது கடை பணியாளர்கள் போராட்டக்காரர்களை அடையாளம் தெரியாமல் பணம் கேட்கும் போது இவர்கள் காந்திஜியின் போராட்டத்திற்கு செல்பவர்கள், பணம் கேட்க வேண்டாம் என்று சொன்னார்கள். இதுவே பின்னாளில் ‘காந்தி கணக்கு’ என்ற சொல்லாடல் வர காரணமாக இருந்தது.
இன்றளவும் ஒரு விஷயத்திற்கு பணம் வராது என்றால் அதை காந்தி கணக்கில் எழுதுவது என்றே நாம் சொல்கிறோம்.




