காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது பள்ளி கல்வித்துறை உத்தரவு..!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலாண்டு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகளில் விடுமுறை அளிப்பது தொடர்ந்து தற்சமயம் நடந்து முடிந்த காலாண்டு தேர்வுக்கு பள்ளிகள் துறை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது, அந்த உத்தரவை மீறி அரசு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் அந்த பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் கண்டிக்கப்படுவார் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்..

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் பள்ளி திறக்கும் நாளை அன்றே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளிக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது…!!

Read Previous

வீட்டிற்குள் பாம்பு வருவது போன்று கனவு வந்தால் என்ன பலன்?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

செந்தில் பாலாஜி விடுதலையாவதில் சிக்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular