இப்போது இருக்கும் காலகட்டத்தில் அனைவரும் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை பழ சாறையும் தேனையும் தண்ணீரில் கலந்து குடித்து வருகின்றனர். இப்படி செய்வதன் மூலம் வைட்டமின் சி பொட்டாசியம் ஆகியவை நமது உடலுக்கு கிடைக்கின்றது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி நமக்கு உதவி செய்கிறது.
ஆனால் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் காரணத்தினால் இதை குடிக்காமல் இருப்பதும் நல்லது. தேன் மற்றும் எலுமிச்சை சாறு கொழுப்பை குறைக்கும் என்னும் காரணத்தினால் உடற்பயிற்சி செய்யாதவர்கள் இதைக் குடிக்கும் போது கல்லீரலில் இது போய் சேர்கிறது. மேலும் நச்சுத்தன்மையையும் போக்க இது உதவி செய்கிறது.
அதேபோல அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பையும் வெளியேற்றும். உடல் எடையை குறைக்க உதவி செய்தும் வருகிறது. பற்கள் பலவீனமாக இருப்பவர்கள் எலும்பு பலவீனம் கொண்டவர்கள் வாய்ப்புண்கள் கொண்டவர்கள் இந்த பானத்தை குடிக்காமல் இருப்பதே நல்லதாகும்.




