பலரும் பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக, காலை உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காலை உணவை அதிக நேரம் கழித்து உட்கொள்வது, உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும். இதனால், சர்க்கரை அளவு கட்டுப்பாடு இழப்பதுடன், உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, எழுந்த 2 மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிடுவது, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கவும், ஆரோக்கியத்தை பேணவும் உதவும்.




