தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஆக.8) காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.




