கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 08) அதிகாலையில் பிக்கப் வாகனம் – பைக் மோதிய விபத்தில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்தும், உயிரிழந்தோரின் விபரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




