காளான் பிரியாணி ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க..!! அம்புட்டு ருசியா இருக்கும்..!!

Oplus_131072

காளான் பிரியாணி செய்வது எப்படி….

தேவையான பொருட்கள் :

மஸ்ரூம் – 1 பௌல் .கொஞ்சம் பெரிய பீசா அரிந்து வைச்சிக்கோங்க .
பாஸ்மதி ரைஸ் – 1 கப் . கழுவி அரைமணி நேரம் ஊற வைக்கவும் .
வெங்காயம் – 2 medium சைஸ் . நறுக்கிகோங்க
தக்காளி – 2 medium சைஸ் – பொடியா நறுக்கிகோங்க .
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 . பெரிய சைஸ் நறுக்கிகோங்க.
புதினா – 1 கப் நறுக்கியது
மல்லி தழை சிறிதளவு
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் .உங்க காரதிர்க்கேற்ப.பச்சை மிளகாய் காரத்தையும் பொறுத்து சேருங்க.
உப்பு ருசிகேற்ப. எண்ணெய் தேவைகேற்ப
தாளிக்க :
கிராம்பு – 4
பட்டை – 2
பிரியாணி இலை – 2
அண்ணாச்சி பூ – 2
மிளகு – 5
சின்ன சீரகம் – 1/4 ஸ்பூன்
சோம்பு / பெருஞ்சீரகம் = 1/4 ஸ்பூன்
செய்முறை
அடி கனமான அகண்ட பாத்திரத்தை எடுத்து கொள்ளவும் .அதற்கு பொறுத்தமான மூடும் தட்டும் வைத்து கொள்ளவும் .
பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்த பொருகள் போட்டு தாளிக்கவும் , பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் ..
இஞ்சி பூண்டு நிறம் மாறும் பொழுது வெங்காயம் , பச்சை மிளகாய் , புதினா சேர்த்து வதக்கவும்
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும் .
தக்காளி குழைந்தவுடன் , பெரிதாக நறுக்கிய மஸ்ரூம் மிளகாய் தூள் தேவையான உப்பு சேர்த்து சிறிது கிளறி
1 கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் .
தண்ணீர் கொத்திதவுடன் , அரசியை சேர்த்து மூடி மிதமான தீயில் கொதிக்க விடவும் .
தண்ணீர் கொதித்து முக்கால் பாகம் சுண்டியவுடன் (தண்ணீர் வற்றி சிறிதளவு சாதத்தில் கோர்த்தால் போல இருக்கும் ) தீயை முற்றிலும் சிறிதாக்கி ஆவி போகதளவு மூட்டி போட்டு மூடிவிடவும்(பெரிய தட்டு போட்டு மூடி ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் தட்டின் மேல் வைத்து விடவும் ) .20 நிமிடம் வேக வைத்து அடுப்பை நிறுத்தி விடவும் .
15 நிமிடம் பொறுத்து மூடியை விளக்கி மல்லி தழை சேர்த்து கிளறி பரிமாறவும் .

Read Previous

நீரிழிவு (கிட்னி செயலிழப்பு) 8 அடையாளங்கள் – கவனிக்காமல் இருந்தால் ஆயுள் முழுவதும் டயாலிசிஸ் தேவை..!!

Read Next

முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular