கர்நாடகா: கொல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற மூகாம்பிகை கோயிலுக்கு இசைஞானி இளையராஜா வைர கிரீடங்கள், தங்க வாள் காணிக்கையாக வழங்கியுள்ளார். தனது சினிமா பயணம் 50 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், காணிக்கை வழங்கி சாமி தரிசனம் செய்தார். தனது மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா மற்றும் குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்ற நிலையில், நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.




