மதுரை விமான நிலையத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘பதவி விலகவுள்ளதாக கூறப்பட்ட செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் என் மீது அளவற்ற அன்பும், பாசமும் வைத்திருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை. ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் பத்திரிகை தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும்.




