குடல் எரிச்சல் நோய்  இருப்பவர்களுக்குப் பயன்படும் வாழைக்காய் பொடி..!!

Oplus_131072

குடல் எரிச்சல் நோய்  இருப்பவர்களுக்குப் பயன்படும்
வாழைக்காய் பொடி

தினமும் ஒரு வாழைப் பழம் இரவில் சாப்பிடுவது குறிப்பாக, தென் தமிழ் நாட்டு மக்களின் பழக்கம். அது செரிமானத்திற்கு உதவும், மலம் சரியாக வெளியேற உதவும் என்பதெல்லாம் காரணமாகக் கூறுவோம்.

ஆனால், அதிக நாட்களுக்கு வாழைப் பழத்தை சேமித்து வைக்க முடியாது. மேலும் வாழைப்பழம் கிடைக்காத சூழலும் சிலருக்கு ஏற்படலாம். அந்நேரத்தில் உலர் நிலையில் இருக்கும் வாழைப்பழ பொடி பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.

அதுபோல், வாழைக்காய் பொடியும் பல நன்மைகளைக் கொடுக்கிறது.

தற்போது இதன் சந்தை நிலவரம் 623 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 2033 இற்குள் இரண்டு மடங்காகும் என்று கணிக்கப் பட்டுள்ளது. காரணம், அந்த அளவிற்கு, அதைத் தேடிச் செல்லும் நோயாளிகளும் அதிகமாகி கொண்டு இருப்பதுதான்.

வாழைகாய் பொடி, 1900 காலங்களில் ஆப்ரிக்கா, ஜமைக்கா போன்ற நாடுகளில், குறிப்பாக கோதுமை மாவுக்குப் பதிலாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப் போரின் போது, வீரர்களுக்கு கொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

பேக்கரி உணவுகள், ஐஸ்கிரீம், ஆறு மாத குழந்தைகளுக்கான இணை உணவுகள், சூப் பவுடர்கள், ரொட்டி வகைகள், சாஸ் உணவுகள், இனிப்புகள் போன்றவை தயாரிப்பதற்கு வாழைப் பொடி பயன்படுத்துகிறார்கள்.

வாழைப் பழத்தை விட, இந்த வாழைக்காய்ப் பொடி சற்றே அதிக விலைதான். காரணம், எட்டு முதல் பத்து கிலோ காய்கள் உலர வைத்தால்தான் ஒரு கிலோ பொடி கிடைக்கும். வாழைக்காயில் அதிக ஈரப்பதம்/ நீர்ச்சத்து (75-80%) இருப்பதால், எடையும் அதனால் மட்டுமே அதிகம். உலர் நிலைக்கு வருவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

அதே நேரம், நீர் வற்றிவிட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், பூஞ்சை தொற்று வராமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆனால், நவீன பதப்படுத்துதலில், tray drying, spray drying என்று எவ்வித இடையூறும் இல்லாமல் எளிதாக செய்து விடுகிறார்கள்.

பொடி தயாரிப்பதற்கு பெரும்பாலும், காயாக இருக்கும் நறுக்கி, உலர்த்திய வாழைக்காய்/ பச்சை வாழைப்பழம் (காயாக) பயன்படுத்தப் படுகிறது. இதில் நார்ச்சத்து குறைவு. பொடியாக மாற்றிய பிறகு பழ மணம் இருக்காது. ஆனால், பழத்தில் தயாரிக்கப் படும் பொடியில் மணமும் அதிகம். நார்ச்சத்தும் அதிகம்.

Gluten ஒவ்வாமை இருப்பவர்கள், கோதுமை மாவிற்குப் பதிலாக இந்த வாழைப் பொடியை உபயோகித்து வந்தார்கள். சிறு குடலில் செரிக்காமல் பெருங்குடலில் நொதித்து, நன்மை செய்யும் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும் “Resistant starch” இதில் அதிகம் என்பதால் குடல் எரிச்சல் நோய் (IBS) இருப்பவர்கள், தொடர் மலச்சிக்கல் மற்றும் புண் இருப்பவர்கள் (பரிந்துரையின்படி) உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

 

Read Previous

அல்சர் குணமாக செய்ய வேண்டிய முக்கிய வழிமுறைகள்..!!

Read Next

உங்கள் குழந்தைகளின் பற்களின் வளர்ச்சி சரியான முறையில் இருக்கிறதா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular