உங்கள் குழந்தைகளின் பற்களின் வளர்ச்சி சரியான முறையில் இருக்கிறதா..??

Oplus_131072

உங்கள் குழந்தைகளின் பற்களின் வளர்ச்சி சரியான முறையில் இருக்கிறதா..??

சிறு குழந்தைகளைப் பொறுத்தமட்டில், நாம் அளிக்கும் சத்துணவானது, பற்களின் வளர்ச்சி, தசைபிணைப்பு, எலும்புகளின் உறுதி, நோய்களை தடுத்தல் மற்றும் நோய் வந்தபின் காப்பது போன்றவற்றிக்கு உதவுகிறது.

நீங்கள், குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவின் அளவு, தரம், பக்குவம், வெப்பநிலை, இடைவேளை போன்றவை பற்களை பாதிக்கும் முக்கிய காரணிகளாகின்றன.

பால்பற்கள் குழந்தை தாயின் கருவறையில் இருக்கும் 2 முதல் 3 மாதங்களிலேயே வளரத்தொடங்கிவிடுகிறது. இது தாயின் ஊட்டச்சத்தை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட சில உணவுப்பொருட்களை குழந்தை சாப்பிடாமல் நிராகரித்தால், அதிலிருக்கும் சத்துக்கள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறாமல் பற்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

இதைப்பற்றி பெற்றோர் கட்டாயமாக தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

ஏதாவது ஒருவகையில் குழந்தைக்கு அந்த உணவுப்பொருட்களை கொடுத்துவிட்டோமானால், குறைபாடுகளைத் தவிர்க்கலாம்.

1. கலோரி மற்றும் புரதச்சத்து குறைபாடு இருக்குமானால் பற்கள் வளருவதற்கு தாமதமும், பற்களின் நீள அகலம் குறைவாகவும், எனாமலின் உறுதித்தன்மை குறைந்தும். உமிழ்நீர் சுரப்பிகள் சரிவர வேலை செய்யாமலும் இருக்கும்.

தானியங்கள், மீன், பால், பருப்புகள், முட்டை உணவுகள் சாப்பிடுவதால் இக்குறைபாட்டை சரிசெய்யலாம்.

2. வைட்டமின் ‘சி’ குறைவாக இருப்பின், பல்லின் உட்புறமுள்ள பல் கூழ் (dental pulp) என்னும் உயிர்ப்புள்ள இணை செல்களால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு உறுதித்தன்மையை இழக்கிறது.

சிறுவலி என்றாலும், குழந்தைகளால் தாங்கக்கூடிய தன்மையும் பற்களின் பாதுகாப்பும் குறைகிறது.

பற்களின் உள்ளமைப்பில் உள்ள odontoblastic என்னும் செல்களின் உறுதித்தன்மை குறைகிறது. அதிகமான பற்கள் விழும் நிலை ஏற்படுகிறது.

இதனை நிவர்த்தி செய்வதற்கு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண பழங்கள், குறிப்பாக நெல்லிக்காய், கொய்யா, முளைகட்டிய பச்சைப்பருப்பு ஆகியவற்றை தினமும் குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டும்.

3. வைட்டமின் “ஏ” குறைவாக இருந்தால், பற்களின் உள்ளமைப்பில் இருக்கும் வெளியடுக்கு செல்களின் (epithelial cell) வளர்ச்சி குறைவதுடன், பற்களின் வளர்ச்சி செயல்பாடு குறைந்து பற்கள் அதிகமாக தெரிந்துவிடும்.

முருங்கைக்கீரை, பரங்கி,பப்பாளி,அகத்தி, மாம்பழம்,தக்காளி, மீன் எண்ணெய் போன்றவற்றை தொடர்ச்சியாக கொடுப்பதால் இக்குறைபாட்டை தவிர்க்கலாம்.

4. வைட்டமின் ‘டி’ பற்றாக்குறை இருப்பின், பாஸ்பரஸ், கால்சியம் ஆகியவையும் பாதிப்படைகிறது. இரத்தத்தில் குறைவான கால்சியம் இருப்பதுடன், அடிக்கடி பற்கள் விழுதல், சொத்தைப்பற்கள், உடைந்த பற்கள் ஆகியவை ஏற்படும்.

போதுமான சூரிய வெளிச்சம் உடலில் படுத்தல் மற்றும் மருத்துவர் பரிந்துரையின்படி வைட்டமின் டி மாத்திரைகள் கொடுக்கலாம்.

5. புளோரைடு குறைபாடு இருந்தால், பற்களின் வெளிப்புற பாதுகாப்பான எனாமல் அல்லது பல் சிப்பியின் கெட்டித்தன்மை அதிகரிப்பதுடன், அளவுக்கு அதிகமான எனாமல் உருவாக்கம் தூண்டப்படுகிறது.

பற்கள் நிறம் மாறுவதுடன் சொத்தையாகவும் இருக்கும் நிலை ஏற்படும். குடிநீரில் இருக்கும் புளோரைடு அளவை சரிபார்த்துக்கொள்வதுடன், இனிப்பு பொருட்கள், கூழ் போன்ற பிசுபிசுப்புள்ள உணவுகள் உண்டபின் பற்களை சுத்தம் செய்வதற்கு பழக்கிவிடவேண்டும்.

6. அயோடின் குறைவாக இருந்தால், பற்கள் உறுதியாக நிலைக்கும் தன்மை குறைவதுட.ன், பற்களின் வளர்ச்சி ஒழுங்கற்ற முறையிலும், சீரான வரிசை இல்லாமலும் காணப்படும்.

அயோடின் செரிவூட்டப்பட்ட உணவும், கடல் உணவுகளும் குழந்தைகளுக்கு தேவையான அளவில் கொடுக்கப்படவேண்டும்.

7. இரும்புச்சத்து குறைபாடு இருப்பின், தாமதமான பற்கள் வளர்ச்சி, உமிழ்நீர் சுரப்பிகள் சரிவர செயல்படாமல் இருத்தல் ஆகியவை காணப்படும்.

இதைத் தவிர்ப்பதற்கு, அடர் பச்சை நிறமுள்ள கீரைகள், காய்கள்,கம்பு, கேழ்வரகு போன்றவை கட்டாயம் உணவில் இருக்கவேண்டும்.

பொக்கைவாய் சிரிப்பு மழலையின் அழகு என்றாலும், முத்துப்பல் வரிசை காட்டி சிரிப்பது குழந்தைகளுக்கும் பேரழகு……. பெற்றோருக்கும் புலங்காகிதம் என்றால் மறுத்துவிடுவீர்களா….?

Read Previous

குடல் எரிச்சல் நோய்  இருப்பவர்களுக்குப் பயன்படும் வாழைக்காய் பொடி..!!

Read Next

கண் திருஷ்டி காணாமல் போவதை உங்கள் கண்களால் காண வேண்டுமா..?? இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular