கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, அப்பகுதி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என மக்கள் குற்றம் சாட்டும் நிலையில், பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசாரோ, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் வீட்டை காலி செய்துவிட்டு செல்லுமாறு மிரட்டுவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.




