சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா முதலிடத்தை பிடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். தாய்லாந்தின் திபாட்சா புத்தாவோங் (165 விக்கெட்டுகள்), ருவாண்டாவின் ஹென்ரியெட் இஷிம்வே (160 விக்கெட்டுகள்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்து அவர் இந்த வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார்.




