குறட்டையைக் குறைக்க சில டிப்ஸ்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

குறட்டையைக் குறைக்க சில டிப்ஸ்:

√ உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ப, உடல் எடையை கொண்டு வருவதன் மூலம் குறட்டைவிடுவது குறையும்.

√ போதைப் பழக்கம் உள்ளவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது பெரும் பிரச்னை. போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள்.

√ குப்புறப் படுத்து உறங்குவதாலும் குறட்டை வரலாம். தூங்கப் போவதற்கு முன் சட்டை பையில் ஒரு டென்னிஸ் பந்தை வைத்து கொண்டு படுக்கலாம். குறட்டை வராமல் தப்பிக்கலாம்.

√ முதுகு தரையில் படும்படி படுங்கள். சிலருக்கு ஒருகளித்து படுப்பது மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.

X இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.

√ போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள திசுக்கள் ஈரப்பதம் அடைந்து சுவாசிப்பதை எளிதாக்கும்.

√ அறை மிகவும் சூடாக இருந்தால் தொண்டையில் காற்று புகும்போது நெரிசல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் குறட்டைவிட வாய்ப்பிருக்கிறது. இதனால் அறையை முடிந்த வரை குளுமையாக வைத்திருங்கள்.

√ குறட்டைக்கு தூசும் ஒரு காரணமாக இருக்கலாம். வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.

√ மருத்துவர்களின் ஆலோசனையுடன் கடைகளில் விற்கும் ஆண்டி ஸ்னோரிங் மாத்திரைகளை வாங்கி கொள்ளலாம்.

√ மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி நல்ல பலனைத் தரும்.

* உங்கள் அருகில் தூங்குபவரிடம் நீங்கள் எவ்வளவு சப்தமாக குறட்டைவிடுகிறீர்கள் என்பதை கவனிக்கச் சொல்லுங்கள். செல்போனில் வீடியோவாக பதியச் சொல்லலாம், மிக அதிகமாக பயங்கர சத்தத்துடன் குறட்டைவிடுகிறீர்கள் என தெரிய வந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள் அலட்சியம் வேண்டாம்.

-> அதற்கு எடுத்த வீடியோ உதவியாக இருக்கும், மருத்துவரிடம் காண்பித்து, வெறும் குறட்டை ஒலி மட்டும் வெளிப்படுகிறதா, இல்லை மூச்சுவிடுவதில் தடை (Sleep Apnea) ஏற்படுத்துகிறதா என்பதை அறிய உதவும்.

எளிய மருத்துவம்

* சித்த மருத்துவத்தில் கூறப்பட்டிருக்கும் சவுரிப் பழத்தை நல்லெண்ணெவிட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளிக்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யப்படும் நசிய சிகிச்சைகள், சுவாசப் பாதையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து குறட்டையைக் குறைக்கும். குறட்டையின் காரணமாக உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க சில உபகரணங்களும் இப்போது இருக்கின்றன.

* சீந்தில் சூரணம், திரிபலா சூரணம் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

* உடல் அமைப்புக்கேற்ப மருத்துவர் பரிந்துரைக்கும் மருத்துவ எண்ணெய்களை (சுக்குத் தைலம், பீனசத் தைலம், நொச்சித் தைலம்), வாரத்துக்கு இரு முறை தலைக்குத் தேய்ந்து முழுகுவது பயன் அளிக்கும்.

* இரவு படுக்கும் முன் வேப்பிலை, மஞ்சல், நொச்சியிலை போட்டு நீரில் நன்றாக கொதிக்க வைத்து ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.

* சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியாக சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.

* காலையிலும், இரவு படுக்க செல்லும் முன்னும் மூக்கில் 2 சொட்டு மிதமான சூடுள்ள பசு நெய்யை (Warm Ghee) விட்டுக்கொள்ளலாம். நெய்க்கு பதில் பிராமி ஆயில் (Brhami Oil) கிடைத்தாலும் உபயோகிக்கலாம்.

* ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடி போட்டு கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம்.

* ஒரு கிளாஸ் வெது வெதுப்பான பாலில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம். (மஞ்சள் தூள் கலப்படம் இல்லாமல் இருத்தல் நன்று).

* யூகலிப்டஸ் எண்ணெயின் நறுமணத்தை தலையணையில் லேசாக தெளித்துவிட்டால், தூங்கும் போது சுவாசிப்பதில் பிரச்சனை ஏதும் நேராமல் இருக்கும்.

* இரவில் படுக்க செல்லும் முன், வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, வாயில் ஊற்றி சிறிது நேரம் கொப்பளித்தால் (Gargle) குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.

* துளசி அல்லது க்ரீன் டீயை குடித்து வந்தால், குறட்டையில் இருந்து மெதுவாக விடுபடலாம்.

* 2-3 துளிகள் ஆலிவ் ஆயிலை வாயில் ஊற்றி பருகினால், குறட்டையில் இருந்து விடுபடலாம்.

* சூடான நீரில் எலுமிச்சை சாற்றினை சிறிது ஊற்றி, அத்துடன் தேன் கலந்து குடித்து வருவதன் மூலமும், குறட்டை பிரச்சனையைத் தடுக்கலாம்.

* தினமும் இஞ்சி, மிளகு, துளசி மற்றும் ஏலக்காயை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

Read Previous

நிம்மதி.. அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

நெற்றியின் இந்த பகுதியை 30 விநாடிகள் மட்டுமே அழுத்தவும், அதன் பிறகு என்ன நடக்கும் பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular