குளிர்காலத்தில் நமது உடலில் ரத்த நாளங்கள் சுருங்குவதால் கை மற்றும் கால் விரல்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. அதிகப்படியான குளிரால் தோலுக்கு அடியில் உள்ள நுண் ரத்த நாளங்கள் சேதமடைந்து அரிப்பு, சிவப்பு நிற தடிப்புகள் மற்றும் வலி போன்ற உபாதைகளை உண்டாக்குகின்றன. இதனை தவிர்க்க கம்பளி மற்றும் கையுறைகளை அணிந்து உடலை வெப்பமாக வைத்திருப்பதோடு, அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் கை, கால்களை நனைத்து மசாஜ் செய்வது சிறந்தது.




