Oplus_131072
பால் பொங்கல் செய்வது எப்படி….
தேவையானவை:
பால் – 1 லிட்டர், பாஸ்மதி அரிசி – 1 கப், பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், நெய் – 3 டேபிள் ஸ்பூன், சீவிய முந்திரி – 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை (அல்லது) வெல்லம் – ஒன்றரை கப், ஏலக்காய்த் தூள் – அரை டீஸ்பூன், குங்குமப்பூ – 1 சிட்டிகை.
செய்முறை:
பாலுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து காய்ச்சுங்கள். அரிசி, பருப்பைக் கழுவி, அடுப்பிலிருக்கும் பாலோடு சேருங்கள். மிதமான தீயில் நன்கு வேகவிடுங்கள். அரிசி நன்கு குழைந்து வெந்தபின் சர்க்கரை சேருங்கள். (சர்க்கரைக்குப் பதில் வெல்லம் சேர்ப்பதானால், பொடித்த வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து, வெல்லம் கரையும் வரையில் கொதிக்கவைத்து வடிகட்டி, வெந்து கொண்டிருக்கும் பால், அரிசி கலவையில் சேர்க்கலாம்.) நன்கு சேர்ந்து வரும்வரையில் கிளறி, இறக்குங்கள். குங்குமப் பூவை, சிறிது சூடான பாலில் கரைத்து, சேருங்கள். முந்திரியை சிறிது நெய்யில் வறுத்துப் பொங்கலில் போட்டு, கடைசியில் மீதமுள்ள நெய், ஏலக்காய் சேர்த்து, நன்கு கிளறிப் பரிமாறுங்கள்.




