தெலுங்கானாவில் மின்வாரிய அதிகாரி வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் மின்சாரத்துறை துணை பொறியாளராக பணியாற்றி வரும் அம்பேத்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், ஊழல் தடுப்புத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அவரது பினாமி சதீஷின் வீட்டில் இருந்து ரூ.2.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.




